• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் தாங்கள் வரவேற்கிறோம் – ஜி.ராமகிருஷ்ணன்

April 8, 2019 தண்டோரா குழு

சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் தாங்கள் வரவேற்பதாக சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை மக்களவை தொகுதியின் சிபிஎம் வேட்பாளர் பி. ஆர் நடராஜனின் கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்குறுதி அறிக்கையைக் கோவை சவுரிபாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.நடராஜன்,

கோவை மாவட்ட சிறு,குறு தொழில் மேம்பட ,விவசாயிகள் நலன் ,பெண்கள் பாதுகாப்பு, 100 நாட்கள் வேலை திட்டத்தில் கூலி உயர்வு மற்றும் அதன் வேலை நாட்களைக் அதிகபடுத்த ,உலக தர வாய்ந்த கல்வி மற்றும் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல வாக்குறிதிகளைக் நாங்கள் கொடுக்கிறோம்.அதுமட்டுமல்லாமல் ,ஜி.எஸ்.டி பிரச்சனை தீரவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,

எங்கள் கூட்டணி கட்சிகள் சார்பில் 8 வழிச்சாலைக்கு எதிராக பல போராட்டங்களைக் நாங்கள் நடத்தி சிறை சென்றிருக்கிறோம். 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

மேலும் படிக்க