• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பயணிகள் வசதிகள் திறப்பு

August 19, 2017 தண்டோரா குழு

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களுக்கு பல்வேறு பயணிகள் வசதிகளை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதுதில்லியில் இருந்து காணொலிக்காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் வரை நீட்டிக்கப்பட்ட நடைமேம்பாலம், சேலம் ரயில்நிலையத்தில் முதல் நடைமேடை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நிலைய மேலாளர் அறை மற்றும் முக்கிய விருந்தினர் அறை, சாமல்பட்டி ரயில்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம், ஆகியவற்றை அவர் இன்று திறந்து வைத்தார்.

இவ்விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், சேலம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரயில் பயணிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் காணொலிக்காட்சி மூலம் உரையாற்றிய சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சகம் தற்போது தமிழகத்தில் பல்வேறு ரயில்நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் பல வசதிகள் செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க