June 30, 2018
தண்டோரா குழு
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடியதாக இருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர்,
“வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக பெருகியிருக்கிறது.அதிகரிக்கும் வாகனங்களால் விபத்தை தவிர்ப்பதுடன் மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை திட்டம்.சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும்.சாலைகளில் தொழில்நுட்பத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கிறது.யாருடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.மேலும்,நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு பெற்றுத் தரப்படும். நிலத்தை திட்டத்திற்கு வழங்க மாநில அரசு உதவி செய்கிறது”.