April 21, 2018
தண்டோரா குழு
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது.சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் ராஜேஸ்வரி என்ற பெண் யானையின் ஒரு காலில் காயம் ஏற்பட்டு,நிற்க முடியாமல் கீழே விழுந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு,உயிருக்கு போராடிய யானை ராஜேஸ்வரிக்கு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.
மேலும்,யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கும் படி விலங்குகள் ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்தது.இந்நிலையில் யானை ராஜேஷ்வரி கருணை கொலை செய்யும் முன்னே உயிரிழந்தது.