• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேரன் டவரில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்

February 22, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு நீண்ட காலங்களாக வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

மேலும் வரி செலுத்துவதற்க்காக சிறப்பு முகாம்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டன.அந்த முகாம்களை பயன்படுத்தி கொண்டு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள சேரன் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 88 கடைகள் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் 98 லட்சம் ரூபாய் வரி நிலுவை வைத்திருந்ததால் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் அக்கடைகளுக்கு சீல் வைத்தனர். இன்று 18 கடைகளுக்கு சீல் வைக்க சென்ற நிலையில் அதில் 3 கடைகள் கடைசி நேரத்தில் வரி செலுத்தியதால் 15 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மீதமுள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் படிக்க