April 10, 2018
தண்டோரா குழு
ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம்; 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் நடக்கவிருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புக்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் மாபெரும் போராட்டங்கள் நடத்தினர்.பின்னர் அனைவரும் கைது செய்யபட்டு போட்டி துவங்கியது. தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் சிலர் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து, உடனடியாக போலீசார் அவர்கைளை வெளியேற்றினர். சென்னை அணி வீரர் முரளி விஜய், ஜடேஜாவை நோக்கி காலணி வீசீயதால் சிறுது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து காலணி வீசியதாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.