June 8, 2018
தண்டோரா குழு
டெல்லியில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விராத் கோலியின் மெழுகுச் சிலையின் காதுபகுதி சேதமடைந்துள்ளது.
டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ்,கால்பந்து வீரர் மெஸ்சி உள்ளிட்டோர் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பேட்டிங் செய்வது போன்று மெழுகுச் சிலை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சிலை அருகே ரசிகர்களின் தொடர் செல்பி எடுத்ததன் காரணமாக கோலியின் மெழுகுச் சிலையின் காது பகுதி சேதமடைந்துள்ளது.இதனையடுத்து சிலை உடனடியாக அகற்றப்பட்டது.