• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல் போனால் ஏற்படும் புதியவகை நோய்.

March 3, 2016 zeenews.india.com

எந்தக் காரணமும் இன்றி அடிக்கடி கைப்பேசியை எடுத்துப் பார்க்கிறீர்களா? யாராவது போனில் கூப்பிடுவது போல் மனதுக்குள் மணியடிக்கின்றதா? ஏதாவது தகவல் மெசேஜ் அல்லது நோடிபிகேசன் வந்துள்ளதா? என நினைக்கிறீர்களா? பதட்டம் வேண்டாம்.

உங்களுக்கு வந்திருப்பது “Rinxiety” எனப்படும் மொபைல் போனால் ஏற்படும் மன அழுத்த நோயாக இருக்கலாம். அமெரிக்காவில் உள்ள Daniel Kruger and Jaikob Djerf from University of மிச்சிகன்-என் ஆர்ப்பர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் க்ருகர் மற்றும் ஜைகோ ஜெர்ப் ஆகியோர் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும் போது, இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவோர் யார் என்று பார்த்தோமேயானால், பெற்றோர்-பிள்ளை உறவு முறைகள் சரியாக இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள், “தங்களுக்கு உறவென்று சொல்ல யாருமில்லை என்றும் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள யாருமில்லை” எனவும் நினைக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்லாது, மற்ற சிலர் எல்லா உறவுகள் இருந்தும், அவர்களிடம் இருந்து விலகி, தொடர்ந்து தங்களது போனிலேயே தன் முழுகவனத்தையும் செலுத்துவதால் உற்றார் உறவினர்களிடமிருந்து தள்ளியே இருக்கின்றனர். தொடர்ந்து உறவுகளில் ஒட்டி வாழாமல் கைப்பேசியையே தங்களது துணைகளாக வாழக்கூடியவர்கள் ஆகியோர் இந்நோயால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, தனிமையில் இருப்பவர்களை இந்நோய் வேகமாகத் தாக்கிவிடுகின்றது. ஏனென்றால் தங்களது துணைகளிடமிருந்து திரும்ப திரும்ப ஏதாவது ஒரு நம்பிக்கையான தகவல்களை போனில் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர். இதனாலும் இந்த நோய் ஏற்படலாம்.
இந்த நோயின் பாதிப்புகளை அவர்கள் கூறும்போது, நீண்ட கால உடலில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையாகும்.

மேலும் படிக்க