• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்லாமல் போன சேமிப்பு பணம் – கலங்கிய மூதாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

November 29, 2019 தண்டோரா குழு

திருப்பூரில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (78). இவர்கள் இருவரும் சகோதரிகள். இவர்களின் கணவர்கள் இறந்துவிட்டனர். இதனால் மூதாட்டிகள் தங்களது மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். மூதாட்டிகளான இருவரும் வயது முதிர்வு காலத்தில் தங்களது பிள்ளைகளைச் சார்ந்து இருக்கக் கூடாது எனக் கருதி வருங்கால மருத்துவ செலவுக்காக சுமார் ரூ.46,000 அளவுக்குப் பணத்தைச் சேமித்து வைத்திருந்துள்ளனர். அண்மையில் ரங்கம்மாள், காசநோய் பாதிப்பையொட்டி மருத்துவமனைச் சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது மருத்துவர்கள், `மேல்சிகிச்சைக்குப் பணம் தேவைப்படும்’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து, ரங்கம்மாள் 24 ஆயிரம், தங்கம்மாள் 22 ஆயிரம் பணத்தை குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகள் அனைத்தும், செல்லாத 500, 1000 நோட்டுகளாகும். இதனை பார்த்த மூதாட்டியின் குடும்பத்தினர் கடும் வேதனையடைந்தனர்.

‘எங்கள் கணவன்மார்கள் கடைசி காலத்தில் வெள்ளாடுகளை விற்பனை செய்து அந்த பணத்தை எங்களிடம் கொடுத்து வைத்தனர். அவர்கள் இறந்தபின்பு எங்களின் செலவுகளுக்கு பணத்தை பயன்படுத்தி வந்தோம். 500, 1000 நோட்டுகளை எடுக்கவில்லை. தற்போது மருத்துவமனைக்கு பணம் தேவைப்படுவது தெரிந்து சேமித்து வைத்த பணத்தை மகன்களிடம் கொடுத்தோம். இந்த நோட்டுகள் செல்லாது என அவர்கள் கூறிய பின்புதான் எங்களுக்கு தெரிய வந்தது’’என மூதாட்டிகள் வேதனையோடு கூறியுள்ளார்கள்.

இதற்கிடையில்,செல்லாத நோட்டுகளை வைத்துக் கொண்டு ரங்கம்மாள் பாட்டிகள் படும் துயரம் செய்தியாக வெளியானது. இதனைக் கவனித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அவ்விரு மூதாட்டிகளுக்கும் உதவ முன்வந்தார். ஏற்கெனவே இந்த இரு மூதாட்டிகளும் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்த தகவலையும் அறிந்து கொண்டார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மூதாட்டிகள் இருவருக்கும் முதியோர் உதவி தொகை கிடைப்பதற்கான அரசாணையை வழங்கினார். அதுமட்டுமின்றி அவர்களின் மருத்துவ செலவுக்கு உதவிகள் செய்யபடும் என விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கலங்கி நின்ற மூதாட்டிகளுக்குக் கரம் கொடுத்து உதவிய மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க