• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்போன் பேசி வாகனம் ஓட்டினால் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் – நீதிபதிகள் கருத்து

September 11, 2017 தண்டோரா குழு

செல்போன் பேசி வாகனம் ஓட்டுபவர்கள் மீது புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் போதையில் வாகனம் ஓட்டுவது,செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட சாலை விதிகளை மீறுவோர்களுக்கு அதிபட்ச அபராதம் விதித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், இது தொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலருக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன்அமர்வு முன்பாக இன்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை போக்குவரத்துகாவல்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை மாநகரில் 2015, 2016, 2017 (31.8.2017 வரை) ஆண்டுகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 3039வழக்ககள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 710 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விதி மீறல் தொடர்பாக 9.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வது,செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிச் செல்வது,அதிவேகத்தில் செல்வது,கூடுதல் சரக்கு ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது போன்ற குற்றங்களில் சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதம் நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றி வருகின்றனர் என்றார்.

இதையடுத்து,செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

செல்போனில் பேசி வாகனம் ஓட்டுபவர்கள் தொடர்பாக புகார் அளிக்க தனியாக கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்துகள் குறித்து டிஜிபி, உள்துறை செயலர்,போக்குவரத்துறை செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கைசெப்டம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க