• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பி எடுக்க முயன்ற ஒருவரை அறைந்த ஸ்ரீலங்கன் யானை.

March 3, 2016 dailymail.co.uk

நம்மில் ஒரு சிலருக்கு புகைப்படங்களுக்கு நிற்பது பிரியமில்லாத ஒன்றைப்போல, விலங்குகளுக்கும் அதே குணம் உண்டு என்பதை ஒரு யானை தன்னை புகைப்படம் எடுக்க நினைத்த ஒரு மனிதரின் கன்னத்தை தன்னுடைய தும்பிக்கையால் அடித்து நிரூபித்து உள்ளது.

ஸ்ரீலங்காவிற்குச் சுற்றுலா சென்ற ஒருவர் செல்பி ஸ்டிக் என்று சொல்லப்படும் ஒரு வகையான புகைப்படக் கருவியை கொண்டு ஒரு யானையைப் படமெடுக்க அருகில் சென்றார். அப்போது அந்த யானை அவரை தன்னுடைய தும்பிக்கையால் அவருடைய முகத்தில் அடித்தது.

இந்தக் காணொளியை எடுக்கும் முன், அந்தப் பூங்காவில் நிறையச் சுற்றுலா பயணிகள் அங்கு வந்து உள்ளனர். ஒரு மஞ்சள் உடையை அணிந்திருந்த ஒரு பயணியிடம் அமைதியாக அவர்களைத் தடவிய வண்ணம் இருந்த யானை, தாடியுடன் கண்ணாடி அணிந்திருந்த ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்ற போது, கோபத்துடன் காணப்பட்டது.

திடீரென்று அந்த மனிதன் நின்றுகொண்டு இருந்த இடத்தை நோக்கி தன் தும்பிக்கையை நீட்டி அவருடைய முகத்தில் அடித்தது. சுற்றி இருந்தவர்களின் புன்சிரிப்பை தவிர நல்ல வேலை எந்த ஆபத்தும் நேரவில்லை.

மிருகங்களின் மனநிலையை இவ்வகை சூழ்நிலையில் அறிந்துகொள்ள இதுவரை எந்த ஆராச்சியும் செய்யப்படவில்லை. ஆனாலும் இவ்வகை கருவிகளை பார்க்கும் மிருகங்கள் அதை ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்னும் சுற்றுலா இடத்தில் அட்ரியன் பௌளீர் என்னும் தெற்கு ஆப்ரிக்கா பயணியின் கையில் இருந்து தவறி விழுந்த செல்பி ஸ்டிக் என்னும் கருவியை தன் தும்பிக்கையால் எடுத்து அவரிடம் திருப்பி கொடுத்தது ஒரு யானை. அதைப் பெற்றுக்கொண்டு, காட்டு வன சுற்றுலாவில் , விக்டோரியா நீர்வீழ்ச்சி, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே எல்லைகளில் அழகிய புகைப்படங்களை எடுத்தார்.

மேலும் படிக்க