January 25, 2021
தண்டோரா குழு
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச விண்வெளி மையம் மற்றும் மார்ட்டின் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தின.
கேபிஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராமசாமி வழிகாட்டுதலின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வரும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளருமான முனைவர் அகிலா மற்றும் இஸ்ரோ எஸ் எஸ் எல் வி விஞ்ஞானியும் திட்ட மேலாளரும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை ஆலோசகருமான கோகுல் மற்றும் மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக நாடு முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் உள்ள திறமைகளை வளர்ப்பதற்காகவும் 100 சிறிய செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு மாணவர்களின் அறிவு மற்றும் திறமைகளை பயன்படுத்துவதையும் இந்தப் பயிற்சிப்பட்டறை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவிடும் வகையில் மார்ட்டின் குழுமம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு நிதி உதவி வழங்கி வருகிறது இதில் தயாரிக்கப்படும் சிறந்த சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் ராமேஸ்வரத்தில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விண்ணில் பலூன் மூலம் ஏவப்பட உள்ளது.இந்த பயிற்சி பட்டறையில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் தயாரிப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவை குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.
இந்த செயற்கைகோள்கள் விவசாயம் கதிர்வீச்சு புற ஊதாக் கதிர்வீச்சு இயற்கை கலப்பு பொருட்கள் அதிர்வு காற்றின் வேகம் புவிவெப்பமடைதல் ஓசோன் மண்டலம் தொடர்பான பல்வேறு தரவுகளை மாணவர்களுக்கு கற்று கொடுக்க பட்டது இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விமான தலைமையகம் தஞ்சாவூர் விமானப்படை தளம் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றில் இருந்து முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளன இந்த நிகழ்ச்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்திய சாதனை அமைப்பும் கண்காணிக்கப்பட உள்ளது.