• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செம்மிப்பாளையம் ஊராட்சியை முற்றுகையிட்ட மக்கள்.

January 26, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிப்பாளையம் பகுதியில் கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஊராட்சிகளில் குடியரசு தினத்தை ஒட்டி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதனிடையே திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கிராம சபைக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நேரத்திற்கு கிராம மக்கள் சென்றனர். ஆனால். “கூட்டம் முடிந்துவிட்டது. கூட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டனர்“ என்று அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறியுள்ளனர்.

அதை ஏற்க மறுத்த கிராம மக்கள், “பல்வேறு முறைகேடுகள் செம்மிப்பாளையம் ஊராட்சியில் நடக்கின்றன. கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் கொண்டு வரும் எந்த ஒரு தீர்மானத்தையும் ஊராட்சி அலுவலர்கள் பரிசீலிப்பதில்லை“ என்று புகார் கூறி, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “குடிநீர் வழங்குவதில் முறைகேடுகள் நடக்கின்றன. அது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக அமைக்கக்கூடாது என இந்த கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்“ என்று அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வலியுறுத்தினர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசைத்தம்பி உறுதி அளித்தார். அதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க