August 24, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதில், செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால்,மாணவர்கள்,பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்; தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை.
மேலும்,தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.