• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்ற வருடம் இதே நாளில் ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி

September 21, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதா கடந்த ஆண்டு இதேநாளில் தான், சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலிலதா 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவர் இறுதியாக கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஜெயலலிதாவை பொதுமக்களால் பார்க்க முடியாமல் போனது.

ஏனெனில், ரயில் சேவையைத் தொடங்கி வைத்த, மறுநாளே உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.

இறுதியாக அந்நிகழ்ச்சியில் ஜெயலிலதா பேசும்போது,

சென்னையை அதிநவீன வசதிகள் கொண்ட பெருநகரமாக மாற்ற வேண்டும் என்ற தனது கனவு நனவாகி வருவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல் சேவையின் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது கட்ட பணிகளுக்கும் ஜப்பான் நிறுவனம் ஆதரவு அளிக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

மேலும், மெட்ரோ ரயில் சேவையைப் போன்று, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் சுற்று வட்டப்பாதை திட்டம், முதலீட்டு வளர்ச்சி ஆகிய திட்டங்களுக்கும் உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

மேலும் படிக்க