June 28, 2018
தண்டோரா குழு
சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் சிசிடிவி கேமரா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“ஒவ்வொருவரும் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது காவல் துறையின் விருப்பம்.சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். கொள்ளையர்களை பிடிக்க சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருக்கிறது.வெளிமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை திருடிதான் செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.ஈரானிய கொள்ளையர்களை ஆந்திரா வரை சென்று பிடிக்க சிசிடிவி கேமரா பெரும் பங்கு வகித்தது.சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக சென்னை எம்.பிக்கள் தங்கள் நிதியில் இருந்து 3 கோடி தருவதாக கூறி உள்ளனர்” எனக் கூறினார்.