• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை சி.ஏ.ஏ போராட்டத்தில் தடியடி எதிரொலி – கோவையில் இஸ்லாமியர்கள் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்

February 14, 2020 தண்டோரா குழு

சென்னையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடியை கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் நள்ளிரவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர். போலீஸாரின் தடியடி நடவடிக்கை கண்டித்து சென்னையில் பல்வேறு பகுதியிகளில் போராட்டங்கள் நடைபெற துவங்கிய நிலையில்,கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நள்ளிரவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனால் பாலக்காடு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே மத்திய அரசை கண்டித்தும், தடியடி நடத்திய போலீஸாரை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வந்த மாநகர துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) பாலாஜி சரவணன், தெற்கு உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அதிகளவு இஸ்லாமியர்கள் குவியத்துவங்கியதால் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீஸார் ஆத்துப்பாலத்தில் குவிக்கப்பட்டனர். சென்னையில் காவல் துறையிருடன் இஸ்லாமிய அமைப்பினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க