• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, கோவை, மதுரையில் நாளை 11 மணி நேரம் அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி !

April 29, 2020 தண்டோரா குழு

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் நாளை (ஏப்.,30) மட்டும், காலை 6 மணி முதல் 5 மணிவரை அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் பொது மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிடுகின்றனர். இதற்கிடையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதால், சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நிபந்தனைகளுடன் அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் நாளை (ஏப்.,30) மட்டும், காலை 6 மணி முதல் 5 மணிவரை அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டுள்ள
அறிக்கையில்,

முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில் நாளை முதல் வழக்கம் முன்பு இருந்த நிலையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,கோவை,மதுரை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் நாளை (30.04.2020) ஒரு நாள் மட்டும்,அத்தியாவசிய பொருட்களான காய்கறி,மளிகை,பழங்கள் ஆகிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

நாளை மறுநாள் (01.05.2020) முதல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்கும் நடைமுறை பின்பற்றப்படும். கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவும் என்பதால்,பொதுமக்கள் அத்யாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாகவும்,பொறுமை காத்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.மேலும், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு எந்தவித மாற்றமுமின்றி மே 3 வரை தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க