March 26, 2018
தண்டோரா குழு
சென்னை ஐ.ஓ.பி வங்கியில் லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் ஐஓபி வங்கியின் கிளையில் உள்ளது. சனி, ஞாயிறு என இரு தினங்கள் விடுமுறை முடிந்து வங்கி ஊழியர்கள் இன்று வங்கிக்கு சென்றனர். அப்போது, வங்கியில் உள்ள 2 லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதையடுத்து அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறைதினத்தை பயன்படுத்தி லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.