• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளருடன் சந்திப்பு

April 10, 2018 தண்டோரா குழு

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டி நடைபெற்றால் வீரர்களை சிறை பிடிப்போம், மைதானத்தில் முற்றுகையிடுவோம் என்று பல்வேறு அமைப்புகள் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் அனைத்து வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதில் ஐபிஎல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இரவு 8 மணிக்கு போட்டி துவங்க உள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கவுபாவை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா சந்தித்து பேசினார். அப்போது, ஐபிஎல் போட்டியை நடத்த போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராஜீவ் சுக்லாவிடம், உள்துறை செயலர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க