April 23, 2018
தண்டோரா குழு
சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் நுழைந்த மர்ம நபர்,வாடிக்கையாளர் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி ரூ.6 லட்சம் பணத்தை பறித்துச் செல்ல முயன்ற சபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டு வாடிக்கையாளர் போல் கொள்ளையன் வங்கிக்கு சென்றுள்ளான்.வங்கியில் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவான அளவில் தான் இருந்துள்ளனர்.உணவு இடைவேளை நேரத்தை பயன்படுத்தி கொண்ட கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி கணக்காளரிடமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது இரு சக்கரவாகனத்தில் தப்பித்து சென்றுள்ளான்.
அப்போது,வேகமாக சென்று கொண்டிருந்த போது,முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளார்.அதில்,அவர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெடிசத்தம் எழுந்துள்ளது.சத்தம் கேட்டு பொதுமக்கள் பயந்து ஓடினார்.இதை பார்த்த அடையார் போக்குவரத்து ஆய்வாளர் கொள்ளையனை துரத்தி சென்று பிடித்துள்ளார்.துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தும் துனிச்சலுடன் கொள்ளையனை பிடித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கொள்ளையனிடம் இருந்து ரூ.6 லட்சம் பணம் மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் வெளிமாநிலத்தை சேர்ந்த சுனில் நரேன் எனவும்,அவர் இதே பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையிலும் கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.