• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கைது செய்யப்பட்ட 17 பேரும் சிறையில் அடைப்பு

July 17, 2018 தண்டோரா குழு

சென்னையில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் வரும் 31ந் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது மாற்றுதிறனாளி சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அந்த சிறுமியை குடியிருப்பின் காவலாளி மற்றும் வேலையாட்கள் இணைந்து கடந்த 7 மாதங்களாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் குடியிருப்புக் காவலாளிகள்,துப்புரவுத் தொழிலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி 24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.இதில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 17 பேர் மீது போஸ்கோ,கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து,இவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில்,நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது போஸ்கோ,பாலியல் வழக்கு விசாரணைகள் தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி நீதிமன்ற அறை பூட்டப்பட்டு 17 பேரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அவர்கள் 17 பேரையும் நீதிமன்றக் காவலில் வரும் 31-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும்,இந்த வழக்கில் 8 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர் தரப்பிலும் ஜாமீன் கோரி எவரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.12வயது சிறுமி தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க