• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் ராணுவ கண்காட்சியை பார்வையிட்டார் தோனி

April 11, 2018 தண்டோரா குழு

சென்னை திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவ தளவாட கண்காட்சியை கிரிக்கெட் வீரர் தோனி பார்வையிட்டார்.

சென்னை அருகே, திருவிடந்தையில் முதல் முறையாக ராணுவ கண்காட்சி இன்று துவங்கியது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள்,போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன.நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார்.நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.இக்கண்காட்சியில் பொதுத்துறை மற்றும் தனியாரை சேர்ந்த நிறுவனங்களின் ராணுவ தளவாடங்கள் உள்ளன.அதைபோல் டிஆர்டிஓ, எச்ஏஎல்,பெல் ஆகியவற்றின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னை திருவிடந்தையில் நடைபெற்றுவரும் ராணுவ தளவாட கண்காட்சியை இன்று பார்வையிட்டார்.

மேலும் படிக்க