• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கொள்ளையனை மடக்கி பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் பாராட்டு

April 19, 2018 தண்டோரா குழு

சென்னையில் பெண் மருத்துவரிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையனை துரத்திப் பிடித்த சிறுவனுக்கு,காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை அண்ணாநகரில் அமுதா என்ற மருத்துவர்,மிண்ட் என்ற பெயரில் கிளினிக் ஒன்றை வைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த இளைஞர் ஒருவர் நோயாளியைப்போல் நடித்து அமுதாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார்.அப்போது அமுதா சத்தம் கேட்டு தெருவில் நின்று கொண்டிருந்த சூர்யா என்ற சிறுவன்,தனது நண்பரின் உதவியுடன் கொள்ளையனை மடக்கி பிடித்தார்.

இதையடுத்து,கொள்ளையனை மடக்கி பிடித்த சிறுவனை இன்று நேரில் அழைத்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,பாராட்டு தெரிவித்தார்.சிறுவனுக்கு காவல்துறை சார்பில் சன்மானமும் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய சிறுவன் சூர்யா,

செயின் பறிப்பில் பல துண்டுகள் கீழே விழுந்ததை பொறுக்கி எடுத்துக்கொண்டே நான் கொள்ளையனை துரத்திச்சென்றேன்.துரத்திச்செல்லும்போதே பொதுமக்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டே ஓடினேன்.ஆனால்,பொதுமக்கள் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர உதவிக்கு யாரும் வரவில்லை, பின்னர் காலரைப் பிடித்து காலை தட்டிவிட்டு முகத்தில் இரண்டு குத்து விட்டவுடன் அவர் தடுமாறிவிட்டார்.

பின்னர் போலீஸுக்கு புகார் அளித்தேன்.போலீஸார் வந்தவுடன் அவரை ஒப்படைத்தேன். பொதுமக்கள் எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர யாரும் உதவ முன்வரவில்லை.போலீஸ் வந்தபின்னர் சுற்றி நின்றவர்கள் போட்டோ எடுக்கத்தான் ஆர்வம் காட்டினார்ர்களே தவிர நான் போராடியபோது பிடிக்க வரவில்லை.கொள்ளையனை பிடித்தபோது எனக்கு பயம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க