March 24, 2018
தண்டோரா குழு
சென்னை காவலர்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க காவல்துறை சார்பில் யோகா பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்,தொடங்கிய யோகா பயிற்சியில்,மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதில் சென்னையில் பணிபுரியும் 10 ஆயிரம் காவலர்களுக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.முதற்கட்டமாக இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், அம்பத்தூர், மாதவரம், வெப்பேரி, பரங்கிமலை உள்ளிட்ட 13 இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்று வருகிறது.