March 5, 2018
தண்டோரா குழு
சென்னை ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில்மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையைநடிகர் ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்துவைக்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்று ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைத்தார். பின், எம்.ஜி.ஆரின் சிலையைத் திறந்துவைத்த நடிகர் ரஜினிகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சிலைத்திறப்புக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த பின், அவர் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும்என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் மொரீசியஸ் குடியரசுத் துணை தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி, இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.