April 5, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,சென்னையில் உள்ள சத்யம், சங்கம், ஏ.ஜி.எஸ். போன்ற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலை மற்றும் மதிய காட்சிகளை ரத்து செய்துள்ளன.