• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா?

June 16, 2023 தண்டோரா குழு

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் பாஜக கட்சி நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,

கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக தேசிய தலைமை முடிவு செய்தபடி ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வெகுஜன தொடர்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று மாநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியின் மூத்த காரியத்தர்கள், அனைவருக்கும்மான அரங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக கடந்த 9 ஆண்டு காலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்திருக்கக் கூடிய சாதனைகளைப் பற்றி மத்திய அரசின் திட்ட பயனாளிகளை சந்திப்பது அவர்களுடன் கலந்துரையாடுவது கட்சி நிர்வாகிகளோடு தனித்தனியாக சந்திப்பு என இந்த மாதம் முழுவதும் பாஜகவினர் நாடு முழுவதும் பிஸியாக உள்ளனர். கோவையை பொருத்தவரை தனித்து நின்ற போதும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பாஜக பெற்றிருந்தது.

மாநிலத்தின் முதல்வர் எங்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது பணிய வைக்க முடியாது எனக் கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா?, இல்லை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை கூறுகிறாரா? என புரியவில்லை. அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதல்வர் பார்க்கிறார். அவரை துன்புறுத்துகிறார்கள் எனக் கூறும் இவர்கள் அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா?, செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா?.

ஆக ஒருபுறம் இதற்கு முன்பாக நீங்கள் பேசியது இதெல்லாம் சினிமா படத்தில் வருவதைப் போல் இதெல்லாம் நீங்கள் தானா என்று கேட்பது போல் உள்ளது. அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நபர்களுடைய கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மாநில அரசாங்கத்தின் கடமை. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி மக்களை திசை திருப்புவதற்காக நாடகத்தை எல்லாம் நடத்த வேண்டாம் மக்கள் நம்பப் போவதில்லை.

பாஜக அண்மை காலமாக எவ்வளவு ஊழல் நடக்கிறது என கூறிக் கொண்டே வருகிறோம். அப்போதெல்லாம் ஆதாரம் கேட்ட செந்தில் பாலாஜி தற்போது ஆதாரத்தை கொண்டு வந்து காண்பித்த பிறகு அய்யய்யோ துன்புறுத்துகிறார்கள் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா என கூறுகிறார்கள்.இதற்கெல்லாம் ஆதாரம் அமலாக்கத்துறையிடம் உள்ளது. அதற்கான பதிலை அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனபாங்கிலிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முதலில் வெளியில் வரவேண்டும். குற்றம் செய்பவர்களின் மாமன் மச்சான் மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் எதை எதிர் கொள்ள வேண்டுமோ அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி ஆட்சி கிடையாது தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை.

திமுகவிற்கே சம்பந்தம் இல்லாமல் பொய் பேசுவது தான் பழக்கம். DMK பைல்ஸ் அடுத்தது அறிவிக்கப் போகிறோம் என மாநில தலைவர் கூறி இருக்கிறார் அறிவிக்கட்டும் பார்க்கலாம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் கொலுசு, ஹாட் பாக்ஸ், கொடுத்ததை எல்லாம் பார்த்துள்ளோம். தேர்தலின் போது கூட எனது தொகுதியிலேயே திமுகவினர் பணம் கொடுத்தார்கள். மத்திய அரசில் இருக்கின்ற ஒவ்வொரு துறையும் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் துறைகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சீமான் பேசிய அத்தனை உரிமைகளும் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு இருக்கக்கூடிய ஜனநாயக நாடாக இந்த நாடு உள்ளது. அவரது பேச்சு உரிமையை அவர் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார். பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் கூட பாஜக கட்சியினரே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்கள், பணமதிப்பிழப்பு உட்பட பல்வேறு விஷயங்களில் தவறு செய்திருந்தால் கூட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவில்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார்.

மேலும் படிக்க