February 16, 2021
தண்டோரா குழு
கோவை அவினாசி சாலை சூலூர் பிரிவில் இருந்து குரும்பபாளையம் அருகே முத்து கவுண்டன் புதூர் வழியாக திருச்சி சாலையை சென்றடையாளம். இச்சாலை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இச்சாலை திருச்சி சாலையை இணைக்கும் மிக முக்கியமான சாலையாக உள்ளது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
மேலும் சூலூர் பிரிவிலிருந்து குரும்பபாளையம் முத்து கவுண்டன் புதூர் வரை ஏராளமான ஆக்கிரமிப்புகளும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் உள்ளது.இதுதொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு சென்னையிலுள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் மற்றும் கோவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு அனுப்பியிருந்தார்.
இதனிடையே நெடுஞ்சாலை துறையினரால் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.மேலும் ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகாத வண்ணம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.