• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் தாலுகாவில் சுகாதாரத்திருவிழா பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்பு

April 26, 2022 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் சுகாதார திருவிழா கோவை மாவட்டம் சூலூர் தாலுக்காவிற்குட்பட்ட வெங்கட்டாபுரம் மற்றும் சுல்தான்பேட்டையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சூலூர் தாலுகாவிட்குட்பட்ட வெங்கட்டாபுரம், சுல்தான்பேட்டை பகுதியில் சுகாதார திருவிழா நடைபெற்றது. கோவை சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.வி.மகாலிங்கம் மற்றும் முத்துமாணிக்கம், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக இந்நிகழ்வில் மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதேபோன்று முதல்வர் காப்பீட்டு அட்டை ஆகியவைகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் கண், காது, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று பயணடைந்தனர்.

இதேபோன்று வெங்கட்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பளியில் நடைபெற்ற சுகாதாரத்திருவிழாவை பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று துவக்கிவைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற சுகாதராத்திருவிழாவில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.

மேலும் படிக்க