• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் சட்டமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து பிரம்மாண்ட இருசக்கர பேரணி

May 17, 2019 தண்டோரா குழு

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து பிரம்மாண்ட இருசக்கர பேரணி நடைபெற்றது.

சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து பிரம்மாண்ட இருசக்கர பேரணி இன்று நடைபெற்றது. இருகூரில், துவங்கிய இந்த பிரம்மாண்ட பேரணியை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு துவக்கி வைத்தார். திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி நடந்த இந்த இருசக்கர பேரணி இருகூரில் இருந்து துவங்கி பள்ளபாளையம், கண்ணம்பாளையம், இராவுத்தூர், இராசிபாளையம், மாதப்பூர் , ராமாச்சிபாளையம், சோமனூர், சாமளாபுரம், செங்கத்துறை, காடாம்பாடி, காங்கேயம்பாளையம் ஆகிய ஊர்களின் வழியாக பேரணியாக வந்து சூலூரை வந்தடைந்தது.

இப்பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க