• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் எலச்சிபாளையம் 37-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

May 19, 2019 தண்டோரா குழு

சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37-வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. இந்த 4 தொகுதிகளில் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இன்று காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37-வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் 1 மணி நேரமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,மாற்று இயந்திரத்தை கொண்டு வந்து வாக்குப்பதிவை
நடத்த தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க