August 26, 2021
தண்டோரா குழு
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது இந்த கோரிக்கை மனுவில் கிராம ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக ஊராட்சி அலுவலகத்தை அணுகும்போது ஊராட்சித் தலைவர்களுக்கு உதவியாக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவி வருகின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்து மக்கள் பணிகளை கவனிக்க அனுமதிப்பதும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் தினக்கூலி அடிப்படையில் கிராம ஊராட்சி செயலர்களுக்கு உதவும் விதமாக வரிவசூல் பணிகளுக்கு வசூல் உதவியாளர் மற்றும் கணினி உதவியாளர்களை தொகுப்பூதியம் அல்லது தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் கிராம ஊராட்சிகளில் தெருவிளக்குகள் பராமரித்தல் மற்றும் மின் கம்பங்களில் பொருத்தம் பணிகளை மேற்கொள்ள மின் பணியாளர்களை நியமிக்க வேண்டும் கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் காலமுறை ஊதியத்தில் பணி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருடன் மனு வழங்கப்பட்டது.