• Download mobile app
22 May 2024, WednesdayEdition - 3024
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மநீம தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

May 18, 2019 தண்டோரா குழு

சூலூர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியுள்ளது.

சூலூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து வருகிறது. மேலும், இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் நேற்று மாலையுடன் நிறைவு செய்தன. ஆனால், சர்ச்சைக்குரிய பேச்சில் சிக்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு, சூலூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அக்கட்சியினர் பெருத்த ஏமாற்றத்துடனேயே இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இதனிடையே, சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணயத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுசெயலாளர் அருணாச்சலம் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 12-ம் தேதி வெடித்த சர்ச்சையால், சூலூரில் பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி கமலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு குறைபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு நாளை நடைபெற உள்ள தேர்தலை ரத்து செய்ய வேண்டும். மேலும், கமலின் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மே 7-ம் தேதியே மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதில் கடிதம் அதிகாரிகளிடம் இருந்து பெறவில்லை. மாறாக, வாய்மொழி உத்தரவிலேயே அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்தின் கடைசி நாளில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், சுதந்திரமான, நம்பிக்கையான தேர்தலை நடத்தவும் வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க