• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூரில் போதிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 95 லட்சம் ரூபாய் பறிமுதல்

March 30, 2019 தண்டோரா குழு

சூலூர் சுல்தான் பேட்டை பகுதியில் போதிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 95 லட்சம் ரூபாய் மற்றும் சிந்தாமணி சுங்கச்சாவடி அருகில் அனுமதியின்றி கொண்டுவந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை பகுதியில் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த பறக்கும் படையின் அதிகாரி திருப்பூர் மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான இந்த படையினர் சுல்தான்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி முன்பாக பொள்ளாச்சியிலிருந்து வேகமாக வந்த ஒரு வாடகைக் கார் வந்தமைத் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த காரின் பின் இருக்கையில் ஒரு இரும்பிப் பெட்டி இருந்தது. அந்த காரில் லட்சுமி விலாஷ் வங்கியின் அடையாள அட்டையுடன் பாலராமஜோதி சுந்தரேஷ்வரி(55) என்ற பெண் அதிகாரியும் வங்கி உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.அவர்களிடம் விசாரிக்கையில் காரில் இருந்த இரும்புப் பெட்டியில் வங்கிப் பணம் 95 லட்சம் ரூபாய் இருப்பதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த பணத்தினை கொண்டு செல்வதற்கான ஆவணங்களைக் கேட்ட போது அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது.மேலும் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கு போதிய காவலர்களும் இல்லாத்தால்சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் இருந்த பணத்தை காருடன் பறிமுதல் செய்து சூலூர் ஜெயராஜ் மற்றும் தேர்தல் அலுவலர் நித்திலவள்ளி அவர்களிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அளித்த தகவலின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலகிருஷ்ண்ணிடம் ஓப்படைத்து பணத்தை கோவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க ஆவண செய்தனர்.

மேலும் இதை தொடர்ந்து சூலூரில் நடந்த வாகன சோதனையில் இரட்டைக் குழல் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் ஜி.எஸ்.டி. சூப்ரெண்டென்ட் சுந்தர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சூலூர் அருகே சிந்தாமணிப்புதூர் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வாகனம் ஒன்று வந்த்து.அதை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் டி.பி.எல்.12 எனும் இரட்டைக்குழல் துப்பாக்கி ஒன்று இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிவந்த மதுப்கரை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து மகன் முருகானந்தம்(43) என்பவரைப் பிடித்து விசாரிக்கையில் துப்பாக்கி கொண்டு செல்வதற்கான எந்த ஆவணங்களும் இல்லாதது தெரியவந்தது.பறக்கும் படை அதிகாரிகள் துப்பாக்கியை சூலூர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.அவர் மேற்கொண்டு விசாரணை செய்து துப்பாக்கியை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க