June 22, 2018
தண்டோரா குழு
விக்னேஷ் சிவனின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றிக்கு பின் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில்நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளஇப்படத்தில் சூர்யா 4 வித்தியாசமான லுக்கில் நடிக்கவுள்ளராம். சூர்யாவுடன் இணைந்து மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிக்கவுள்ளனர் என அதிகார்பபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கதாநாயகியாக வனமகன் புகழ் சயிஷா நடிக்கவுள்ளார். இந்நிலையில், தற்போது, இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொம்மன் இரானி தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஷூட்டிங்கை லண்டனில் வருகிற ஜூன் 25-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.