• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன – கோவை மாநகராட்சி ஆணையர்

September 24, 2019 தண்டோரா குழு

சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குனார் ஜடாவத் கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குனார் ஜடாவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெறும் நடவடிக்கைகள் கோவை மக்களுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது. உப்பு தண்ணீர் வசதி துண்டிக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. சூயஸ் திட்டத்தை பொறுத்தவரை தண்ணீர் விநியோகம் குழாய் பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே மேற்கொள்ளும். கோவை மாநகராட்சியில் ஏற்கனவே இருக்க கூடிய குடிநீர் இணைப்புகள் அப்படியே தொடரும். மாநகராட்சியின் அதிகாரத்திற்குட்பட்டே சூயசின் அனைத்து பணிகளும் தொடரும். சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன. சூயஸ் திட்டத்திற்கான பணிகள் முதற்கட்டமாக ஆர்.எஸ் புரம் பகுதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

மேலும் படிக்க