• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு முக ஸ்டாலின் நேரில் ஆறுதல்

December 3, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் நடூர் ஏ.டி.காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுசுவர் இடிந்து விழுந்து 4 வீடுகள் தரைமட்டமானது.

இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

நடூர் ஏ.டி.காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுசுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.சுவர் பழுதடைந்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்து இருக்கின்றனர் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அரசு,அமைச்சர், அதிகாரிகளின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்

இறந்தவர்களின் உடலை திருட்டுதனமாக பிரேதபரிசோதனை செய்து இருந்து எரியூட்டி இருக்கின்றனர்.உடலை உரியவர்கள் வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். பொது மக்களும் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.போராடியவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர்.அதில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 4 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அதை அதிகப்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன்,
வீடும் கட்டித்தரவேண்டும விபத்திற்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வெட்ககேடானது. சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

மேலும் படிக்க