• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோருக்கு கடும் கண்டனம் – ஈஷா அறிக்கை !

January 11, 2023 தண்டோரா குழு

இது தொடர்பாக ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

◆ சுபஶ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது.யாரும் எதிர்பாராத இத்துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

◆ காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் வெளியிட கூடாது என்ற உறுதியில் இத்தனை நாட்கள் அமைதி காத்தோம்.

◆ சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறைக்கு முறையாக வழங்கி உள்ளோம்.

◆ ஊடக முகமூடிகளை அணிந்து கொண்ட சில யூ-டியூப்பர்கள், புலனாய்வு என்ற பெயரில் மர்ம நாவல்கள் எழுதும் திறன் படைத்த ஊடக எழுத்தாளர்கள், மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள் இதனை தங்கள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

◆ இவ்வழக்கு குறித்த வதந்திகள் & அவதூறுகளை சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

◆ வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் & ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

◆ விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் களைத்து விடமுடியாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க