March 11, 2020
தண்டோரா குழு
கோவை மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (28), ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். இவர் சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் மரச்செக்கு ஆயுள் கம்பனி வைத்து இயக்கி வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை கடையில் இருந்த போது திடிரென கடைக்கு புகுந்த 4 மர்ம நபர்கள் சூரிய பிரகாஷை இரும்பு பைப், லாடுகள் மற்றும் அரிவாளால் சராமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே தகவல் அறிந்த இந்து அமைப்பினர் சுந்தராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சூர்யபிரகாஷ் மீது தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சம்பவத்தை கண்டித்து கோசங்களை எழுப்பியதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மேலும் மதுக்கரை, சுந்தராபுரம் , குனியமுத்தூர், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சூர்ய பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் மதுக்கரை மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது. இரு பிரிவு அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.