• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுந்தரம் – கிளேட்டன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக டாக்டர் லக்ஷ்மி வேணு பொறுப்பேற்பு

May 6, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றான சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக டாக்டர் லட்சுமி வேணு இன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் பொறுப்பேற்றார்.இவர் ஏற்கனவே டாக்டர் வேணு சுந்தரம் கிளேட்டனின் இணை நிர்வாக இயக்குநராக இருந்தார்.

டாக்டர் லக்ஷ்மி வேணு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுந்தரம் கிளேட்டனை முன்னோடியாக இருந்து வழிநடத்தி வருகிறார். சுந்தரம் கிளேட்டனின் உலகளாவிய தடத்தை நிறுவுவதில் அவர் முன்னணி நிர்மாணிப்பவராக இருந்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் தென் கரோலினாவில் டார்செஸ்டரில் ஒரு ஃபவுண்டரியை அமைப்பதற்கான அவரது முடிவு ஒரு முன்னறிவிப்பாக இருந்தது, ஏனெனில் பெரும்பாலான அமெரிக்காவை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்கள் விநியோகச் சங்கிலி அபாயங்களைக் குறைக்கவும், கார்பன் தடயத்தைக் குறைக்கவும், கரையோர ஃபவுண்டரி அலகுகளைத் தேடுகிறார்கள்.

அவர் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஃபவுண்டரியாக மாற்றியுள்ளார்.மேலும் கம்மின்ஸ், ஹ_ண்டாய், வோல்வோ, பேக்கர் மற்றும் டெய்ம்லர் ஆகியோருடன் சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை உருவாக்கியுள்ளார்.

சுந்தரம்-கிளேட்டன் தலைவர் ஆர் கோபாலன் கூறுகையில்,

“லக்ஷ்மி வாடிக்கையாளர் பற்றிய ஆழ்ந்த புரிதலைக் கொண்டுள்ளவர் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை வளர்த்துள்ளார். போட்டியின் அனுகூலத்தை உருவாக்க உலகளாவிய தடம் பெறுவதற்கான ஒரு முக்கிய உபாயத்தை அவர் வெற்றிகரமாக பட்டயப்படுத்தியுள்ளார். சுந்தரம்-கிளேட்டனை உலகத் தரம் வாய்ந்த வாகன உதிரிபாக உற்பத்தியாளராக அவர் தொடர்ந்து மாற்றுவார் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

அட்மிரல் பி.ஜே. ஜேக்கப் (ஓய்வு), தணிக்கைக் குழுவின் தலைவர், சுந்தரம்-கிளேட்டன், “சுந்தரம் கிளேட்டனின் நிர்வாக இயக்குநராக லக்ஷ்மி வேணுவின் பதவி உயர்த்தப்பட்டது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக மிகவும் கடினமான காலத்தில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்குப் பொருத்தமான அங்கீகாரமாகும். நிறுவனத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு அவருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

வேணு சீனிவாசன், தலைவர் எமரிட்டஸ், சுந்தரம்-கிளேட்டன், “கடந்த பத்து ஆண்டுகளில் லக்ஷ்மியின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு முயற்சிகள் தரம், லாபம் மற்றும் ழுநுஆகளுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்தி நிறுவனத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அமெரிக்க நடவடிக்கைகளை நிறுவுவதற்கு அவர் தலைமை தாங்கினார், இது சமீபத்தில் நடவடிக்கைகளைத் தொடங்கியது. அவரது தலைமையின் கீழ், சுந்தரம்-கிளேட்டன் உலகளவில் அதன் உயர்வைக் காணும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

பதவியை ஏற்று கொண்ட பிறகு, சுந்தரம்-கிளேட்டனின் நிர்வாக இயக்குனர் டாக்டர் லக்ஷ்மி வேணு கூறுகையில்,

“சுந்தரம் கிளேட்டனை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்வது உண்மையிலேயே ஒரு மரியாதை. உலகம் மிக வேகமாக மாறிவருகிறது மற்றும் வாகனத் துறையில் இடையூறுகள் புதிதாகி வருகின்றன. எதிர்காலம் உற்சாகமாகவும், சவாலாகவும் இருக்கும் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கவும் உள்ளது. எங்களிடம் ஒரு சிறந்த குழு உள்ளது மற்றும் இந்தியாவிலும் உலக அளவிலும் சுந்தரம் கிளேட்டனை வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

பங்குதாரர்கள், இயக்குநர்கள் குழு, ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகம் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை உண்மையாக்குவேன் என்று நம்புகிறேன். எமரிட்டஸ் தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் தலைவர் ஆர்.கோபாலன் அவர்களிடமிருந்து நான் பெற்ற வழிகாட்டுதலுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன், அவர்கள் எப்போதும் எங்கள் கலங்கரை விளக்கங்களாக நிலைத்திருப்பார்கள்.” என்றார்.

மேலும் படிக்க