• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு புதிய எக்ஸ்ரே கருவி கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள்

February 6, 2022 தண்டோரா குழு

கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் மற்றும் கோயமுத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் ஆகியோர் இணைந்து சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ் ரே லேப் கட்டிடத்தை புணரமைத்து புதிய எக்ஸ்ரே கருவி வழங்கினர்.

கல்வி,மருத்துவம்,உள்ளிட்ட சமூகம் சார்ந்த நலத்திட்டங்களை ரோட்டரி மற்றும் ரவுண்ட் டேபிள்,லேடீஸ் சர்க்கிள் அமைப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இந்நிலையில் கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ் ரே லேப் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.

இதனை தொடர்ந்து லேப் கட்டிடத்தை புணரமைப்பு செய்து புதிய எக்ஸ் ரே கருவியும் வழங்க கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் மற்றும் கோயமுத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் அமைப்பினர் முடிவு செய்தனர்.அதன் படி ரூபாய் ஏழு இலட்சம் செலவில் புணரமைத்த கட்டிடம் மற்றும் எக்ஸ் ரே கருவியை துவக்கும் விழா நடைபெற்றது.

கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் தலைவர் தீபேந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலாளர் ராகுல் கிருஷ்ணகோபால், ஒருங்கிணைப்பாளர் ராகுலன் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஆனைமலைஸ் டொயோட்டா இணை மேலாண் இயக்குனர் விக்னேஷ்வர் மற்றும் ஏரியா 7 தலைவர் விஷ்ணு பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, எக்ஸ் ரே கருவியை துவக்கி வைத்தனர்.

மேலும் படிக்க