May 30, 2018
தண்டோரா குழு
சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்வேல்முருகன் மீது தேச துரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக பிரச்சினையால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.என்எல்சி முற்றுகை போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே,உளூந்தூர் பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.