• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா !

December 24, 2022 தண்டோரா குழு

கோவை காளப்பட்டி சாலையில் சுகுணா பிப் பள்ளியில் ஆண்டு விழா இன்று பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.

சுகுணா பள்ளி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயண சாமி தலைமை வகித்தார். பள்ளியின் தலைவர் சுகுணா வரவேற்பு உரையாற்றினார்.

தமிழக அரசு மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாசு இல்லா தமிழகம் தூதுவராக சுகுணா பள்ளியின் தலைவர் சுகுணா நியமித்தது.இதன் ஒரு பகுதியாக
இவ்விழாவில் மாணவர்கள் பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தினர். மேலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் தலைவாசல் விஜய் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில்,

மதிப்பெண் மட்டுமே ஒருவரை நல்ல தகுதி உடையவராக மாற்றாது. மாணவர்கள் தங்கள் கனவை நோக்கி பயணிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
என்றார். மேலும் அவரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

இவ்விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க