May 14, 2018
தண்டோரா குழு
ஹைதராபாத்தில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலிருந்து 15 சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
ஹைதராபாத் அருகே உள்ள சையதாபாத்தில் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி உள்ளது.இந்நிலையில், வெள்ளியன்று இரவு அங்குள்ள கழிவறையின் கண்ணாடியை உடைத்து 15 சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.இதில் 10 பேர் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் ஹைதராபாத் மற்றும் ஒருவர் மக்பூப் நகரைச் சேர்ந்தவர். இந்த சிறுவர்கள் அனைவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் கடந்த வருடமும் தப்பித்து சென்று மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
சிறுவர்கள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சையதாபாத் ஆய்வாளர் கே.சத்திய்யா கூறுகையில்,
இந்த சம்பவத்தை பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.தப்பி ஓடிய சிறுவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களை பிடிப்போம் எனக் கூறியுள்ளார்.