63-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஐ’ படத்துக்காக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விக்ரமுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்புகளைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அவர்களுடன் இணைந்து ஐ படத்தின் ஒளிப்பதிவாளரும் தனது எதிர்ப்பினை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “தேசிய விருதுகள் பல சமயத்தில் அதன் நோக்கத்தை இழந்துவிடுகிறது. இது விக்ரமுக்கு கிடைத்த இழப்பு அல்ல. தேசிய விருதுகளுக்கான இழப்பு” என்றார்.
அதுமட்டுமின்றி விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன் மற்றும் ஐ படத்தில் நடித்த விக்ரம் ஆகியோருக்கு விருது கிடைக்காதது தனக்கு வருத்தமளிப்பதாக சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
மேலும் ஐ படத்துக்காக விக்ரம் கொடுத்த உழைப்பு வார்த்தைகளால் சொல்லமுடியாதது என்றும் அவர் கூறியுள்ளார். விசாரணை படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை சமுத்திரக்கனி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது