April 11, 2018
தண்டோரா குழு
சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது கொடுமையானது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி,கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“அறவழிப் போராட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் வன்செயல்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல.ஆனால், சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவது கொடுமையானது”. என்று கூறியுள்ளார்.