• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் பயன்படுத்த முடியாத இணையதளங்கள்.

May 4, 2016

சீனாவில் பிரபல இணையதள வசதிகள் சிலவற்றை பயன்படுத்த முடியாத வகையில் தடை செய்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கும் நாடாகச் சீனா திகழ்கிறது. உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாகவும் உள்ளது.

விலையுயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும் அது சந்தைக்கு விநியோகத்திற்கு வந்த சில நாட்களிலேயே அந்தப் பொருளை போலப் போலியான ஒன்றைச் சீனா வெளியிட்டு விடும்.

அதில் ஆப்பிள் போனும் உள்ளடங்கும். போலிப் பொருளில் பிரபலமான நாடாகவும் சீனா விளங்குகிறது.

இணையதள வசதிகள் மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது. தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் உடனுக்குடன் பயன்படுத்தக்கூடிய வசதிகள் வந்துவிட்டன.

இருப்பினும் உலக நாடுகளில் தலை சிறந்து காணப்படும் சீன நாட்டில் முக்கிய வலைத்தளங்களை அரசு தடைசெய்து வைத்துள்ளது. அதைப் பற்றி தற்போது காண்போம்.

1.கூகுள் (google) :

உலக நாடுகள் பிரபலமாக தேடப்படும் தேடலில் ஒன்று கூகுள். உலகில் உள்ள மக்களில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய இணையதளமாகக் கூகுள் விளங்குகிறது. ஆனால் அந்தச் சேவையை சீன அரசாங்கம் தற்காலிகமாக தடைசெய்து உள்ளது.

2:யாஹூ (yahoo) :

ஜிமெயில் போன்று யாஹூ வையும் மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். யாஹூ வசதியை 2012 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால் மையின்லாந்து குறித்த பாதுகாப்பிற்கு எனத் தெரிவிக்கிறது.

3. பேஸ்புக் (Facebook):

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சமூக வலைத்தளமாக பேஸ்புக் இயங்கிக்கொண்டு வருகிறது. பேஸ்புக்கின் அடிமைகளாகப் பல மக்கள் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் சீனாவில் பேஸ்புக் பயன்படுத்த தடைவிதிக்கப் பட்டுள்ளது.

4. டிவிட்டர் (Twitter):

டிவிட்டர் பேஸ்புக்கை போலவே சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவும் சீன அரசால் அங்குத் தடை செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. பிபிசி (BBC news):

பிபிசி என்பது உலக அளவில் பிரபலமான செய்தி நிறுவனம் ஆகும். உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள பயன்படுகிறது. அப்படிப்பட்ட அந்தச் செய்தி நிறுவனத்தைச் சீனா தடைசெய்துள்ளது.

6. சவுண்ட் க்ளவுடு (Sound cloud):

சவுண்ட் க்ளவுடு என்பது இசை பிரியர்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் சேவை ஆகும்.

இசை பிரியர்கள் தங்களது இசை மற்றும் தங்களது குரலை அதில் பதிவு செய்து வெளியிடுவர். அது உலகம் முழுவதும் சவுண்ட் க்ளவுடு பயன்படுத்துபவர்களுக்கு கொண்டு பொய் சேர்க்கும்.

அந்த வகை சேவையை சீனாவில் தடைசெய்துள்ளனர்.

மேலும் இது மட்டுமல்லாது சில ஆபாச தளத்தையும் சீன அரசு தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க