• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாவில் குழந்தைகளுக்கு சதாம் ,ஜிஹாத், என்று பெயர்கள் வைக்க தடை

April 26, 2017 தண்டோரா குழு

சீனாவில் முஸ்லீம்கள் தங்கள் குழந்தைகளுக்கு சதாம் ,ஜிஹாத், மதீனா என்ற பெயர்களை வைக்க சீன அரசு தடை விதித்துள்ளது.

சீனாவின் சின்ஜியாங் மாகணத்தில் 10 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தீவிரவாததிற்கு எதிரான நடவடிக்கையாக சீன அரசு அந்த மாகாணத்தில் வாழும் முஸ்லீம் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் சில பெயர்களுக்கு தடை விதித்துள்ளது

இது தொடர்பாக சீனாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனம் செவ்வாய்கிழமை(ஏப்ரல் 25) வெளியிட்ட அறிக்கையில்,

சீனாவின் சின்ஜியாங் மாகணத்தில் பல முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு ‘ஹுகோவ்’என்னும் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமை குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அவசியமானதாக கருதப்படுகிறது.

தற்போது சீன அரசு குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் சில பெயர்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால், முஸ்லிம் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘சதாம்’என்ற பெயரை ஆண் குழந்தைக்கும் ‘மதீனா’ என்ற பெயரை பெண் குழந்தைக்கும் வைத்தால், இந்த உரிமை மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்லாம், குரான், மெக்கா, மதீனா, ஜிஹாத், இம்மாம், சதாம், ஹாஜ் ஆகிய பெயர்களும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும்,குழந்தைககள் பெயர் தடை செய்யப்பட்ட முழுபட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்று அந்த அறிக்கையில் சீனாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க