June 2, 2018
தண்டோரா குழு
சீனா நாட்டின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். இவர் ஹூண்டாய் கம்பெனியின் சோனாட்டா காரை பயன்படுத்தி வந்தார்.சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அந்த காரை குய் மிகவும் நேசித்து வந்தார். தனது குடும்பத்தில் ஒருவர் போல் தான் காரை நேசித்துள்ளார்.
தனது குடும்பத்தாருடன் எப்போதும் காரை பற்றி புகழ் பாடிக்கொண்டே இருந்துள்ளார்.
எல்லோரிடமும் தன் காரை பற்றிய அதிகம் பேசுவார்.ஒரு வேளை தான் இறந்து விட்டால் கூட என்னுடைய கார் என்னை விட்டு பிரிய கூடாது என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் குய் மரணமடைந்தார்.
இதையடுத்து குய்யின் குடும்பத்தினர் அவரின் ஆசைப்படியே அவரது காரையும் அவரோடு சேர்த்து புதைக்க முடிவு செய்தனர். அதன்படி அவரது உடலை புதைக்கும் போது அவர் விரும்பும் சோனாட்டா காரையும் கயிறு கட்டி மண்ணுக்குள் போட்டு புதைத்து விட்டனர்.
இந்த சம்பவத்தை குய்யின் உறவினர்கள் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.